9 காளையை அடக்கிய வீரர் பரிதாப மரணம்! ஜல்லிக்கட்டு போட்டியில் நேர்ந்த சோகம்
ஐல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற இளைஞரொருவர் பரிதாபமாக காளையால் தாக்கப்பட்டுள்ளார்.
வரலாற்று சம்பவமிக்க ஜல்லிக்கட்டு
உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். ஆரம்பத்திலிருந்து போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் போட்டியில் பாலமேடு உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து வீரர்கள் வருகை தந்த கலந்துக் கொண்டார்கள்.
இந்நிலையில் ஐல்லிக்கட்டியில் கலந்துக் கொண்ட வீரர் அரவிந்த் ராஜன் சுமார் 9 மாடுகளை பிடித்து 3 வது இடத்தில் இருந்துள்ளார்.
காளை தாக்குதல்
இதனை தொடர்ந்து காளையை அடக்க முயன்ற பாலமேடுவைச் சேர்ந்த அரவிந்த் ராஜனை மாடு கடுமையாக தாக்கியுள்ளது.
இதன்போது இளைஞரின் வயிற்றிலுள்ள குடல் வெளியே வந்த நிலையில், அங்கிருந்தவர்களால் அவசரமாக மதுரை உள்ள ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரின் தீவிர நிலையை அறிந்த மருத்துவர்கள் கடுமையாக சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இதனை பார்த்த நெட்டிசன்கள் குறித்த இளைஞரின் குடும்பத்தினருக்கு இறங்கல் தெரிவித்துள்ளார்கள்