ரஜினி பிறந்த நாளில் நீலாம்பரியாக மாறிய பாட்டி! அசுர வேகத்தில் குவியும் வைலக்குகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரின் பிறந்தநாள் அன்று ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா உலகெங்கிலும் உள்ள திரையரங்குளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
அதுமட்டுன்றி இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை சில இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் செம மாஸாக ரீகிரியேட் செய்திருந்தனர். அந்தவகையில் நீலாம்பரியாக மாறி அசத்திய பாட்டியின் காணொளியொன்று இணையத்தில் தற்போது படு வைரலாகி வருகின்றது.

75 வயதை எட்டிய ரஜினி
75 வயதிலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும், 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகின்றார். எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துகொண்டுள்ளதுடன், ஹீரோவாகவே அசத்தி வருகின்றார்.

இவரின் இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாத வகையில், தனக்கென ஒரு தனித்துமான பாணியை வைத்திருக்கும் இவரின் நடிப்புக்கு உலகளவில் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மாத்திரமன்றி ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவிக்கும் விதமான நேற்றைய தினம் வெளியிட்ட பல காணொளிகள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |