வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டுமானால் காலை உணவு குறித்து அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அதை விட முக்கியமாக காலை உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மிகுந்த அக்கறை செலுத்தப்படவேண்டும். காலை உணவு நமது ஆராக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

பொதுவாகவே காலையில் எழுந்தவுடன் காபி,டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அந்த பழக்கம் மட்டுமல்ல காலையில், வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிடுவதும் முற்றிலும் தவறாதனது என மருத்துவர்கள் எச்சரிக்கின்னர்.

தொடர்ந்து காலை உணவாக சில தவறான உணவு பழக்கத்தை கொண்டிருப்பது செரிமான அமைப்பை சேதப்படுத்துத்துவதுடன், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மருத்துவர்களின் கருத்துப்படி வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிடவே கூடாத சில உணவுகள் குறித்து இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதவை

காபி - பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் படுக்கையில் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுடிருக்கின்றார்கள் ஆனால், வெறும் வயிற்றில் காபி குடிப்பது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிப்பதால், இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீர பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மேலும், இதில் உள்ள காஃபின் மன அழுத்த ஹார்மோன்களை (கார்டிசோல்) அதிகரித்து பதட்டத்தை தூண்டும்.

சிட்ரஸ் பழங்கள் - ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், காலையில் எந்த உணவும் சாப்பிட முன்னர் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது அமிலத்தன்மை மற்றும் வாயுப் பிரச்சினைகளை அதிகரிக்கும். எனவே காலையில் ஆரோக்கியமான உணவுக்கு பின்னர் தாராளமான சிட்ரஸ் பழங்க ளை எடுத்துக்கொள்ளலாம்.

வாழைப்பழங்கள் -வாழைப்பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இரத்தத்தில் மெக்னீசியம் அளவு திடீரென அதிகரிக்கும், இது இதயத்தைப் பாதிக்கும் என்பதால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.
மேலும், அவற்றில் உள்ள சர்க்கரைகள் இன்சுலின் அளவை அதிகரித்து சிறிது நேரத்திற்கு பின்னர் உங்களை சோர்வாக உணரச்செய்யும். இது காலையில் உங்களின் வேலைகளை உட்சாகமாக ஆரம்பிப்பதற்கு தடையாக இருக்கலாம்.

தயிர் - தயிர் செரிமான ஆற்றலை மேம்படுத்துவதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது அதில், நல்லது செய்யும் புரோபயாடிக்குகள் (நல்ல பாக்டீரியாக்கள்) உள்ளன. இருப்பினும், வெறும் வயிற்றில், வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் இந்த நல்ல பாக்டீரியாக்களைக் கொல்கிறது.உணவுக்கு பின்னர் தயிர் எடுத்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை உணவுகள்- பொதுவாகவே சர்க்கரை கலந்த உணவுகள் உடல் பருமன், நீரிழிவு போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. காலையில் டோனட்ஸ் மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற இனிப்புகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். பின்னர் அவை விரைவாகக் குறையும். இது நாள் முழுவதும் சோர்வாகவும், மீண்டும் மீண்டும் பசி உணர்வை துண்டிக்கொண்டே இருக்கும்.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்- முக்கியமாக வெறும் வயிற்றில் சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். அதில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை பொருட்கள் வயிற்று எரிச்சல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.இதை தொடர்ந்து குடிப்பது பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அமையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |