படர் தாமரையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே குணப்படுத்தலாம் இந்தப் பொருட்கள் இருந்தால்...
படர்தாமரை என்பது தொற்றக்கூடிய ஒரு நோயாகும். இது சிறியவரில் இருந்து பெரியவர் வரைக்கும் வரக் கூடிய ஒருதோல் நோய் தொற்றாகும். அதிக உஷ்ணம் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள சருமங்களில் இந்த தோல் நோய் உண்டாகுகின்றது.
இந்த படர்தாமரை டெர்மடோஃபைடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒருவருக்கு இந்த படர்தாமரை வந்து விட்டால் அரிப்பு மற்றும் சொரிச்சல் பிரச்சினைகள் ஏற்பட்டு சருமத்தையே பாதித்து விடும்.
மேலும், இது அதிக எடைக் கொண்டவர்கள், சக்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு ஏற்படும். இது ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு பரவ 1 இலிருந்து 3 வாரங்களில் பரவ ஆரம்பிக்கும்.
படர்தாமரைக்கு வீட்டு மருத்துவம்
வேம்பானது பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இந்த வேம்பு இலையை நன்றாக அரைத்து அரிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தடவி வந்தால் படர்தாமரை அழிந்து விடும்.
வேம்பைப் போலவே மஞ்சளும் அதிக மருத்துவ நன்மையைக் கொண்டது இந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் பதத்திற்கு செய்து அரிப்பு இருக்கும் இடங்களில் தடவி வந்தால் சில நாட்களில் மாறி விடும்.
படர் தாமரை இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை பழம் மற்றும் நல்லெண்ணெய் கலந்து அரிப்பு இருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
ஆவாரம் பூ செடியை அரைத்து படர்தாமரை இருக்கும் இடங்களில் பூசி வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.