உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்போ தேங்காய் எண்ணெய்யில் இந்த பொருட்களை சேர்த்து தடவுங்க!
முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் வெள்ளை முடி வரும் ஆனால் இப்போது சிறிய வயதுடைய பிள்ளைகளுக்கு கூட இந்த இளநரை பிரச்சினை அதிகம் இருக்கின்றது.
இந்த இளநரை பிரச்சினை விட்டமின் B6,B12,பயோடின் மற்றும் விட்டமின் D போன்ற ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாகத்தான் வெள்ளைமுடி உருவாகிறது.
இந்த இளநரையை மறைக்க பலர் சாயம் பூசுவதைத்தான் தீர்வாக எண்ணிவிடுகிறார்கள். ஆனால் அப்படி சாயம் பூசுவதிலும் உங்கள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுதான்.
இவ்வாறு சாயம் பூசாமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு பயன்படுத்தினால் உடலுக்கும் தீங்கு இல்லாமல் முடியிற்கும் தீங்கு இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய்யுடன்
அப்படி இயற்கையாக உங்கள் கைகளிலே செய்த எண்ணெய்யைப் பயன்படுத்திபாருங்கள். தேங்காய் எண்ணெய்யானது சரும பராமரிப்பிலும், கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகுக்கிறது மற்றும் எலுமிச்சையில் விட்டமின் பி மற்றும் விட்டமின் சி நிறைந்து இருக்கிறது. இவை இரண்டும் கூந்தலுக்கு வலுவானதாக இருக்கிறது.
தேங்காய் எண்ணெய்யுடன் மருதானியையும் சிகைக்காய் பொடியையும் கலந்து தலையில் தடவி தலையை கழுவினால் 10 நிமிடத்தில் வெள்ளை முடி போய் கருப்பு முடி தோன்றும்.
எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தடவினால் முடி கருப்பாக மாறும்.