இந்த தேதியில் பிறந்தவங்க கஷ்டப்படாம முன்னேறுவாங்க- யாராலும் தடுக்க முடியாத வளர்ச்சி
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்கள் கஷ்டப்படாமல் முன்னேறுவார்கள். அவர்கள் வளரும் பொழுது யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அப்படியானவர்கள் என்னென்ன தேதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
கஷ்டப்படாமல் முன்னேறும் தேதிகள்
3ஆம் தேதி | எண் கணிதத்தின் படி, 12 மாதங்களில் 3ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நிச்சயம் வெற்றி காத்திருக்கிறது. மற்றவர்களை பேசி மயக்குவதில் திறமையானவர்களாக இருப்பார்கள். எந்தவித தயக்கமும் இல்லாமல் மற்றவர்களுடன் பழகுவார்கள். சாதிக்க நினைப்பவர்களுடன் அதிகமாக பழகுவார்கள். இதுவே இவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். செல்லும் வழியில் யார் தடங்கலாக இருந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாது பயணிப்பார்கள். |
6ஆம் தேதி | எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6ம் தேதியில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்களாக இருப்பார்கள். நேர்மையானவர்கள் இருப்பதால் மற்றவர்களுடன் எந்தவித வாக்குவாதமும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். மற்றவர்களுடன் எளிதாக பேசிப் பழகுவார்கள். வாய்ப்புகள் வரும் பொழுது சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதுவே அவர்களின் வெற்றியின் ரகசியமாக உள்ளது. |
11ஆம் தேதி | எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 11 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். வாழ்க்கையின் வெற்றியை மிக இலகுவாக அடைந்து விடுவார்கள். அதிகமான நம்பிக்கையாளராக இருப்பார்கள். பல வாய்ப்புக்கள் இவர்களுக்கு கிடைக்கும் பொழுது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |