ஆரஞ்சு பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும்! ஏன் தெரியுமா?
ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்ச் பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
பயன்கள்
ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகம்
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
தினமும் ஆரஞ்சு பழம் உண்டு வரும் பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் அபாயம் குறைவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
வெறும் 2 ஸ்பூன் எள்ளில் இவ்வளவு நன்மைகள் கொட்டி கிடக்கா! அலண்டு ஓடும் இதய நோய்
வைட்டமின் சி
100 கிராம் ஆரஞ்சு பழத்தில் கிட்டத்தட்ட 53 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.
மேலும் இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுக்கிறது.
பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கிரீன் டீ! எந்தெந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது தெரியுமா?
தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும்
உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளால் இருதய கோளாறு, இரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படலாம்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்தானது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுவதுடன் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
இளமையான சருமம்
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு இளமையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தினை அளிக்கும்.
எனவே ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தினை பெற ஆரஞ்சு பழத்தினை தினமும் சாப்பிட்டு வரலாம்.
ஆரஞ்சு பழச் சாற்றை தினசரி அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
நீரிழிவு நோயாளி தினமும் ஒரே ஒரு துண்டு பச்சை வெங்காயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
விந்தணுக்களின் ஆரோக்கியம்
ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
எனவே, ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்கள் தொடர்ந்து ஆரஞ்சு பழங்களை சாப்பிட வேண்டும்.
மாரடைப்பு அபாயம் குறைவு
ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
சிறுநீரக கற்கள் ஏற்படாது
கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமிருப்பதால், இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன் வைக்க உதவுகிறது.
சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
ரமலான் நோன்பு இருப்பது உடல்நலத்திற்கு நல்லதா?
எப்போது சாப்பிடலாம்?
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உணவு உட்கொண்ட பின்பு உடனே சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் அமிலம் உருவாகுவதை அதிகரித்துவிடும்.
செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கும். உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடலாம்.