வெறும் 3 நிமிட விளம்பரம் - புர்ஜ் கலீஃபாவில் எவ்வளவு செலவாகும் தெரியுமா?
புர்ஜ் கலீஃபாவில் 3 நிமிட செய்தி அல்லது விளம்பரத்தை ஒருமுறை ஸ்க்ரீன் செய்ய பல கோடிகளில் செலவாகும் என்று சொல்லப்படுகின்து.
புர்ஜ் கலீஃபாவில் 3 நிமிட விளம்பரம்
துபாயில் இருக்கும் புர்ஜ் கலீஃபா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான இடம். இந்த இடத்தில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் என்பதை யாராவது யோசித்து உள்ளீர்களா? இங்கு 3 நிமிட விளம்பரத்திற்கே பல கோடிகள் செலவாகின்றன என கூறப்படுகின்றது.

இங்கே விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் முதலில் கட்டிடத்தின் உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸிடம் அனுமதி பெற வேண்டும். இவர் அனுமதி இல்லை என்றால் இங்கே விளம்பரம் எடுக்க முடியாது.
ஒரு விளம்பரம் செய்ய செலவு என்று பார்த்தால் எவ்வளவு நேரம் விளம்பரம் ஓடுகிறது, எப்போது ஓடுகிறது போன்றவற்றின் அடிப்படையில் தொகை மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த புர்ஜ் கலீஃபாவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றிருந்தபோது, புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ’செம்மொழியான தமிழ் மொழியே’ பாடல் விளம்பரம் செய்யப்பட்டது.
அதேபோல், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் காட்சிகளும் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இதுபோல விளம்பரங்களை வெளியிட ஆசைப்பட்டால் 3 நிமிடத்திற்கு தோராயமாக 68,000 டாலர் செலவழிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
இது இந்திய மதிப்பில் ரூ.57 லட்சம். வாரத்தின் இறுதி நாட்களில் 8 மணி முதல் இரவு 10 மணி வரை விளம்பரத்தை வெளியிட வேண்டும் என்றால் 95,000 டாலர் அதாவது, ரூ.80 லட்சம் கொடுக்க வேண்டும்.

மேலும் வாரத்தின் இறுதி நாட்களில் ரூ.2.27 கோடி வரை கட்டணம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. உங்களிடம் பணம் இருக்கிறது என்றால் நீங்கள் திருமணங்கள் பிறந்தநாள் போன்றவற்றை கூட இங்கே விளம்பரம் செய்யலாம்.




| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |