பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கிரீன் டீ! எந்தெந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது தெரியுமா?
பெரும்பாலானோர் இன்றைய காலத்தில் தினமும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து க்ரீன் குடிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர்.
கிரீன் டீ
குறிப்பாக புத்துணர்ச்சி மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் பெரிதும் நாடுவது க்ரீன் டீயைத்தான்.
சிலர் தினமும் ஒரு கப் க்ரீன் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தாலும், சிலர் ஒரு நாளைக்கு 5 மற்றும் அதற்கும் அதிகமாக க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை பெண் லொஸ்லியாவா இது? ஷாக் கொடுத்த செயல்…. வளைத்து கொடுத்த உடம்பு
பக்கவிளைவுகள் என்ன?
க்ரீன் டீயை அதிகமாக உட்கொள்வது உங்கள் தூக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
கிரீன் டீயை அதிகமாக குடிப்பதாலும் ரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கும்.
கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது தவிர, உங்கள் பசியும் குறைகிறது, இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும்.
கிரீன்-டீயில் உள்ள காஃபின் நரம்புத் தளர்ச்சி, தலைச்சுற்றல், நீரிழிவு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .
எத்தனை முறை குடிக்கலாம்?
ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் கிரீன் டீ குடித்தால் நீரிழப்பு ஏற்படும். அதிகமாக கிரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் வெளியேற்றப்படும். எனவே உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் கிரீன் டீயை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
எந்த நேரத்தில் குடிக்கக்கூடாது?
தூக்கத்தை கெடுக்கும் என்பதால் தூங்கச் செல்வதற்கு முன் குடிக்கக்கூடாது
காலையில் எழுந்தவுடன் குடித்தால் கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் இரைப்பை அமிலம் அதிகம் சுரக்குமாறு செய்து வயிற்று கோளாறுகளை உண்டாக்கும்.
மருந்து எடுத்துக் கொள்ளும் போது கீரின் டீ பருகினால் மாத்திரையிலுள்ள ரசாயனங்கள் கிரீன் டீயுடன் கலந்து தீய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
உணவு அருந்தும் போது பருகினால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. உணவு அருந்தி குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பின்பு தான் இதை அருந்த வேண்டும்.