இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது? நீங்க எப்படினு ஈஸியா தெரிஞ்சிடும்
ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.
மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
அணில்
இந்த படத்தில் உங்களது கண்களுக்கு முதலில் அணில் தெரிந்தால் உங்களது இடது மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவதாக அர்த்தம். இடது மூளை சுறுசுறுப்பாக இருப்பவர்கள் வலுவான பகுப்பாய்வு திறனைக் கொண்டிருப்பதுடன், தர்க்கரீதியான மனநிலையுடன் சூழ்நிலைகளை அணுகுவார்களாம்.
சிக்கலான பிரச்சனைகளைக் கூட திறம்பட சமாளிப்பதில் வல்லவர்களாக இருக்கும் இவர்கள், விமர்சன சிந்தனை மற்றும் எதையும் நன்கு ஆராய்ந்த பின்பே சிறந்த முடிவை எடுப்பார்கள். இவர்கள் எதையும் ஒழுங்காக செய்யும் திறன் கொண்டதால், அனைத்து விடயத்திலும் நல்ல வெற்றியை பெறுவார்களாம்.
வாத்து
குறித்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்களது கண்களுக்கு வாத்து தெரிந்தால், வலதுமூளை சுறுசுறுப்பாக செயல்படுகின்றது என்று அர்த்தம்.
இவ்வாறு வலதுமூளை சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் நல்ல படைப்பாற்றலைக் கொண்டிருப்பதுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கலைநயத்துடன் ரசித்து வாழ்வார்கள்.
எப்படிப்பட்ட சிக்கலாக இருந்தாலும், அதனை எளிதில் தீர்த்து வைப்பதுடன், புதுமையான யோசனையும் வழங்குவார்கள். கலைத்துறையில் சிறந்து விளங்குவதன் மூலம் அனைவரிடமும் பிரபலமாகவும், தனித்துவமாகவும் காட்சியளிப்பார்கள்.
இவர்களின் படைப்புத்திறன், சிறப்பான குணம் மட்டுமல்ல, இவர்களை சுற்றியுள்ளவர்களுடன் எ்வவாறு சிறப்பாக தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் அடிப்படை பகுதியாகவும் இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |