இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க
இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சமையலறையில் இன்றியமையாத பகுதியாக இரும்பு சமையல் பாத்திரங்கள் இருந்து வரும் நிலையில், இதில் சமைப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றது.
ஆனால் இரும்பு பாத்திரத்தில் சமையல் செய்யும் முன்பு சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் சில தவறுகளை இதில் செய்யவே கூடாதாம். அதை தற்போது தெரிந்து கொள்வோம்.
இந்த தவறை செய்யாதீங்க
இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது எலுமிச்சை சாறு, சிட்ரிக் மற்றும் அசிடிக் உள்ள பொருட்கள் எதையும் சேர்க்கக்கூடாது. இவை உணவுக்கு உலோக சுவையை சேர்க்குமாம்.
மேலும் இரும்பு பாத்திரத்தில் சமைத்த பொருட்களை சமைத்த பின்பு அப்படியே வைக்காமல், வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைக்க வேண்டும். இது உணவு கருப்பு நிறமாக மாறாமல் தடுக்க உதவுகின்றது.
இரும்பு தவாவை பழக்குவது எப்படி?
இரும்பு தவாவை பழக்கும் போது, வெங்காயத்தை பாதியாக வெட்டி எண்ணெய்யில் தோய்த்து தவாவில் தடவ வேண்டும். பின்பு கல் சூடான பின்பு தோசை ஊற்றினால் தோசை ஒட்டாமல் வரும்.
*வெங்காயத்திற்குப் பதிலாக மஸ்லின் துணியையும் பயன்படுத்தலாம். மஸ்லின் துணியை பயன்படுத்தி இரும்பு தவாவின் மீது எண்ணெயைத் தடவி, பயன்படுத்தினாலும் தோசை ஒட்டாமல் வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |