ஆழ்மன பயத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் என்ன தெரிகிறது?
1. புத்தகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது முதலில் புத்தகம் இருப்பது போன்று தெரிந்தால் ஆழ்மனதில் கொடி பயத்தை மறைத்து வைத்திருப்பார்கள்.
- உயிரை பறிக்கும் அளவிற்கு கடும் பயத்தில் இருப்பீர்கள்.
- அதிக வலி அனுபவித்து உயிரை இழந்துவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
2. சிறுவன்
- படத்தை பார்க்கும் போது கண்களுக்கு முதலில் சிறுவன் இருப்பது போன்று தெரிந்தால் ஆழ்மனதில் உள்ள பயம் அமானுஷ்யம் மற்றும் பேய்களை கொண்டதாக இருக்கும்.
- இவர்கள் பேய், கெட்ட ஆவிகள், மந்திரவாதிகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்திற்கும் பயம் கொள்பவராக இருப்பார்கள்.
- இருள் சூழந்த இடத்திற்கு சென்றால் பேய் குறித்த பயம் இருந்து கொண்டே இருக்கும்.
3. படகு
- ஆப்டிகல் இல்யூஷனை பார்க்கும் போது கண்களுக்கு படகு இருப்பது போன்று தெரிந்தால், ஆழ்மனத்தில் எண்ணற்ற அச்சங்களின் சுமை இருக்கின்றன.
- அதிக முறை நிராகரிப்பு மற்றும் வலியை அனுபவித்து பெறும் சோகத்தில் இருப்பீர்கள்.
- பயத்திலிருந்து மீட்டெழ முடியாத அளவு உங்களின் மனதில் எண்ணங்கள் உள்ளன.
4. கடல்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது கடல் இருப்பது தெரிந்தால் உங்கள் ஆழ்மனதில் மரண பயத்துடன் கூடிய அச்சங்கள் இருக்கும்.
-
இந்த பயத்தினால் உங்களை இழக்க மாட்டீர்கள். நீங்கள் விரும்பும் ஒருவரை இழக்கும் பயத்தைக் குறிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |