உங்களிடம் உள்ள creativity-ஐ கண்டுபிடிக்க ஒருTest- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. ஒரு பெண்ணின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுத ஒரு பெண்ணின் முகம் இருப்பது போன்று தெரிந்தால், சிறந்த படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.
- உங்களுடைய மூளையின் வலது பக்கம் இடது பக்கத்தை விட மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் உங்களுடைய கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.
- வலுவான உள்ளுணர்வு கொண்டவராக இருப்பீர்கள்.
- அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கும் நீங்கள் இசை, நடனம், நடிப்பு போன்ற கலைகளின் மீது அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள்.
- மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்கள் மீது அக்கறை காட்டும் நபராக இருப்பீர்கள்.
2. சாக்ஸபோன் வாசிக்கும் மனிதன்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்க்கும் பொழுது சாக்ஸபோன் வாசிக்கும் மனிதன் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் தர்க்க ரீதியாகவும், பகுபாய்வு ரீதியாகவும் சிந்திக்கும் நபராக இருப்பீர்கள்.
- உங்கள் மூளையின் இடது பக்கம் வலது பக்கத்தை விட மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் கணிதம், அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள்.
- பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள்.
- யதார்த்தமான ஒருவராக இருப்பதால் உங்களை தேடி வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக இருக்கும்.
- உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் தன்மை உங்களிடம் இருக்கும்.
- எதையும் ஒழுங்காக செய்யக்கூடிய திறமை இருப்பதால் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
