ஊட்டி பாணியில் காரசாரமான கிரீன் சில்லி சிக்கன்... அப்படி செய்து அசத்துங்க!
அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் நிச்சயம் முக்கிய இடத்தை பெற்றுவிடும்.எந்த உணவுடனும் பக்காவாக பொருந்தக்கூடிய ஒரு உணவாக இருப்பதே சிக்கனின் சிறப்பம்சம்.
அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவராலும் விரும்பப்படும் சிக்கனை கொண்டு, ஊட்டி பாணியில் எவ்வாறு அசத்தல் சுவையில் பச்சை மிளகாய் சிக்கன் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நெய் - 100 மிலி
பூண்டு - 150 கிராம்
பச்சை மிளகாய் - 150 கிராம்
சிக்கன் - 250 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
சோயா சாஸ் - 1/2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
சோள மாவு - 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு இடி உரலில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு இடித்து, ஒரு கிண்ணத்தற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே உரலில் பூண்டு சேர்த்து அதையும் நன்றாக இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் 6 பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி அதன் பின்னர் அதில் சிக்கனை கழுவி சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

சிக்கன் பாதியளவுக்கு வெந்ததும், மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு , மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்ததும், அதில் சோயா சாஸ், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, சோள மாவை நீரை கரைத்து ஊற்றி கிளறிவிட்டு, 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் ஊட்டி பாணியில் அசத்தல் சுவையில், பச்சை மிளகாய் சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |