தந்தூரி சிக்கன் சாப்பிட்டால் கேன்சர் வருமா! மருத்துவர் கூறுவது என்ன?
பொதுவாகவே பிரபலமான சிக்கன் ரெசிபிக்களின் பட்டியலில் தந்தூரி சிக்கன் முக்கிய இடம்வகிக்கின்றது.
அதன் தனித்துவமான சுவைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அடிமையாகாதவர்களே இருக்க முடியாது.

தயிர் மற்றும் மசாலாப் பொருட்களில் மாரினேட் செய்யப்பட்ட கோழியிலிருந்து இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.பின்னர் நேரடியாக நெருப்பில் வாட்டி எடுக்கப்டுகின்றது.
இவ்வாறு அதன் சமையல் முறையில் நேரடியாக தீயில் சமைப்பதால், தந்தூரி சிக்கன் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என்ற கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

இது குறித்து குழந்தைகள் நல மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் Dr.அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
மருத்துவ விளக்கம்
அதில் அவர் குறிப்பிடுகையில், கிரில் சிக்கன், தந்தூரி போன்ற நீண்ட நேரம் சூடுபடுத்தும் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு புற்றுநோய் வரும் என்று இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள எந்தவொரு ஆய்விலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

தந்தூரி சிக்கன் அதன் புகை சுவைக்காக விரும்பப்படுகிறது. ஆனால் அது தீங்கு விளைவிப்பதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.
சில ஆய்வுகள் மிக அதிக வெப்பத்தில் இறைச்சியை சமைப்பது புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய ரசாயனங்களை உருவாக்கும் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அவற்றை டொன் கணக்கில் சாப்பிட்டால் மட்டுமே அது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார்.

வறுக்கப்பட்ட மற்றும் வறுத்த உணவுகள் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளையும், பார்பிக்யூ, கிரில் அல்லது தந்தூரி உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கின்றதா என்பது குறித்தும் மருத்துவர் அருண்குமார் கொடுத்துள்ள விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |