நாவூறும் சுவையில் வெங்காயம் தக்காளி சப்ஜி செய்ய முடியுமா? பலரை வளைச்சு போட்ட ரெசிபி
வழக்கமாக செய்யும் உணவுகளிலும் பார்க்க, வித்தியாசமான உணவுகளை தினமும் செய்யும் பொழுது வீட்டில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதே சமயம், உடல் ஆரோக்கியமும் நிலையாக இருக்கும்.
வீட்டில் தக்காளி, வெங்காயம் அதிகமாக இருந்தால் அதனை வைத்து வித்தியாசமான ரெசிபி செய்து பார்க்கலாம்.
அதுவும் வீட்டிலுள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் அந்த ரெசிபி இருக்க வேண்டும்.
அந்த வகையில், வீட்டில் உள்ள அனைவரையும் வளைத்து போடும் வெங்காயம் தக்காளி சப்ஜி எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம்- 15-20
- மஞ்சள் தூள்
- சிவப்பு மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
- சீரகம்
- இஞ்சி பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
- தக்காளி- இரண்டு
- கொத்தமல்லி பொடி
- கருப்பு மிளகு தூள்
- வெந்தய விதைகள்- இரண்டு தேக்கரண்டி
- கெட்டியான தயிர், கிரீம்
சப்ஜி எப்படி செய்றாங்க தெரியுமா?
முதலில் சிறிய வெங்காயங்களை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தனியாக வைத்து கொள்ளவும்.
மீதமுள்ள மூன்று அல்லது நான்கு வெங்காயங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் சிறிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தை எடுத்து தனியாக வைத்து விட்டு, அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது கடைசியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் வதங்க விட்டு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் சேர்த்து கிளறி விடவும். வெங்காயம் வதங்கியதும், இரண்டு தக்காளி விழுது சேர்த்து கொள்ளவும்.
அதன் பின்னர், அதனுடன் கொத்தமல்லி தூள், கருப்பு மிளகு தூள் மற்றும் உலர்ந்த வெந்தயம் சேர்த்து கிளறவும். இரண்டு தேக்கரண்டி கிரீமி போன்ற கெட்டியான தயிர் மற்றும் மசாலாக்கள் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
குழம்பு பச்சை வாடை நீங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும், ஏற்கனவே வறுத்த வெங்காயத்தை அதில் சேர்க்கவும். மேலும் கிரீம் மற்றும் பச்சை கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து, 2 நிமிடயங்கள் சமைக்கவும். சுவையான குழம்புடன் கூடிய கிரீமி மற்றும் காரமான வெங்காய காய்கறி தயார்! இதனை சூடான சப்பாத்தி, தோசை, இட்லிக்கு வைத்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
