Tamizha Tamizha: தொகுப்பாளரிடம் அவரது மகளை குறித்து கேள்வி எழுப்பிய நபர்! அரங்கத்தில் எழுந்த கோபம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் மற்றும் கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் மற்றும் கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் மகள் கட்டுப்பாடு இல்லாத பக்கத்திலும், தந்தை கட்டுப்பாடுடன் சாப்பிடும் பக்கத்திலும் இருந்து விவாகத்தினை எடுத்து வைத்தனர்.
தொகுப்பாளர் மகள் அங்கே இருக்கும் போது நீங்கள் எப்படி இங்கிருக்கீங்க என்றார். மேலும் குறித்த குழந்தை வாரத்திற்கு 3 தடவையாவது நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் என கேட்க குறித்த தந்தையும் அதனை வாங்கி கொடுக்கவும் செய்கின்றார்.
ஒரு கட்டத்தில் தொகுப்பாளரிடம் நீங்கள் உங்களது குழந்தைக்கு வாங்கிக் கொடுப்பதில்லையா? என கேள்வி எழுப்பினார். கோபத்தில் கொந்தளித்த தொகுப்பாளர் உடனே வீட்டிற்கு போன் செய்து கேளுங்கள் என்று குறித்த நபரை கடுமையாக பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |