இரண்டு பொருட்களை வைத்து செய்யக்கூடிய சூப்பரான தொக்கு! நீங்களும் செய்யலாம்
பொதுவாக காலையுணவிற்காக இட்லி, தோசை செய்யும் போது அதற்கு காமினேஷனுக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு.
சாம்பார் வகைகளை விட வெங்காயம் மற்றும் நல்வெண்ணெய் சேர்த்து தொக்கு செய்தால் சாப்பிடுவதற்கு இன்னும் சுவையாக இருக்கும்.
இந்த தொக்கை செய்வதும் இலகு காலையில் சாம்பார் செய்வதற்கு அதிநேரம் செல்லும் இதனால் இந்த தொக்கு எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொண்டால் நீங்களும் சமையல் செய்து அசத்தலாம்.
அந்தவகையில் நல்லெண்ணெய் தொக்கு எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 4
தனியா – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன் காய்ந்த
மிளகாய் – 8
கறிவேப்பிலை – தேவையாள அளவு
புளி – சிறிதளவு
தயாரிப்புமுறை
முதலில் 4 வெங்காயங்களை எடுத்து கீற்று வகையில் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதனை நீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மை பத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அடுப்பை வைத்துக் கொண்டு கடாயில் வெந்தயம், கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை நன்றாக வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
மிக்ஸியிலிருக்கும் வெங்காயத்துடன் மசாலா கலவையை சேர்த்து மீண்டும் ஒரு தடவை அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் நல்லெண்ணெய் 3 ஸ்பூன் சேர்த்து சூடாகியதும், சிறிது கடுகு சேர்த்து நன்றாக பொறியும் வரை இருக்க வேண்டும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் மசாலா கலந்த கலவை என்பவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
சிறிது நேரம் சென்றதும் நல்லெண்ணெய் பிரிந்து வரும். அப்போது 1 ஸ்பூன் வெல்லம் மற்றும் புளிக்கரைச்சல் சேர்த்து 5 நிமிடங்களுக்கு பின்னர் இறக்கினால் சுவையான தொக்கு தயார்!