ஒரு மாம்பழத்தின் விலை இத்தனை ஆயிரமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
ஒரு மாம்பழத்தை 19 ஆயிரத்திற்கு மேல் விவசாயியொருவர் விற்பனை செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.
மாம்பழம்
பொதுவாக நாம் மாம்பழங்கள் என்றால் அதற்காக நம்மையே கொடுத்து விடுவோம். இதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான்.
இனிப்பு, புளிப்பு, கசப்பு என அணைத்து சுவையும் கொண்டுள்ள ஒரே கனி இந்த மாம்பழங்கள் தான்.
இந்த பழங்களின் சீசன் வந்து விட்டால் அதனை பல இடங்களில் அவர்களுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்வார்கள்.
அந்தவகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் மாம்பழத்திற்கு என தனி மவுஸை வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜப்பானில் விவசாயி நககாவா என்பவர் தான் விவசாயம் செய்து எடுக்கின்ற மாம்பழங்களை ஒரு கனி ரூ.19 ஆயிரத்திற்கும் ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனை செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்படியென்ன இந்த பழத்தில் இருக்கின்றது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
விவசாயி கூறிய உண்மைகள்
குறித்த மாம்பழங்களை ஹொக்கைடோ தீவில் உள்ள ஓட்டோஃபுக்கில்தான் நககாவா விளைவிக்கிறார்.
இந்த பகுதி வெப்ப நீரூற்றுகளுக்குப் சிறப்பு வாய்ந்தது. இந்த இடத்தில் மாம்பழங்கள் விளைவிப்பதால் இதற்கு இப்படியொரு மவுசு இருக்கின்றது.
மேலும் ஜப்பானில் இருக்கும் மாம்பழங்களில் இது தான் சிறப்பு வாய்ந்தாம். இதனை தொடர்ந்து குறித்த விவாசாயி இந்த பழங்களை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து விற்பனை செய்து வருகிறார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ மாம்பழத்தில் இருக்கும் இந்த சுவைக்கு வெப்பம் - பனி தான் காரணம். உற்பத்திக்காக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதும் இல்லை.
மாறாக ஒரு மாம்பழ சீசனுக்கு சுமார் 5 ஆயிரம் மாம்பழங்கள் வரை தான் கிடைக்கும். இதன் காரணமாக தான் இதனை இந்த விலைக்கு விற்கிறேன்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இணையவாசிகள்,“ அப்படியென்றால் இரண்டு பழங்கள் சாப்பிட ஆசைப்பட்டால் இரண்டு மாதங்கள் உழைக்க வேண்டும் போலயே.” என நகைக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.