மாம்பழத்தை சாப்பிடும் முன் நீரில் ஊற வைக்கனும்....ஏன் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க!
மாம்பழத்தை வாங்கினால் அதை உடனே சாப்பிடாமல் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.
இதனால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
புதிய வீடு வாங்கிய பிக்பாஸ் பெண் போட்டியாளர்
இப்போது ஏன் மாம்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.
ஏன் நீரில் ஊற வைக்க வேண்டும்?
மாம்பழத்தில் உள்ள கெமிக்கல்கள், அழுக்குகள் மற்றும் தூசிகள் நீங்குவது மட்டுமின்றி, மாம்பழத்தின் சுவையும், தரமும் மேம்படுமாம்.
மாம்பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது மற்றும் கோடைக்காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மாம்பழத்தை நீரில் ஊற வைப்பதன் மூலம், மாம்பழத்தில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள் குறையும். உடல் வெப்பம் அதிகரித்தால், அது மலச்சிக்கல், முகப்பரு, தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
தற்போது மாம்பழங்களை விரைவில் பழுக்க வைப்பதற்காகவும் பூச்சிகளால் பாழாகாமல் இருக்கவும் பல்வேறு கெமிக்கல்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படி கெமிக்கல் நிறைந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் மோசமான பாதிப்பை உண்டாக்கும்.
அதுவும் பூச்சிக் கொல்லிகளானது சரும எரிச்சல், குமட்டல், சுவாசப் பாதை எரிச்சல், அலர்ஜி, புற்றுநோய் மற்றும் தலைவலி போன்றவற்றை உண்டாக்கலாம்.
ஆகவே தான் மாம்பழத்தை சாப்பிடும் முன் 30 நிமிடம் நீரில் ஊற வைத்து சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பைடிக் அமிலம் என்பது ஒரு வகையான சத்து. இது உடலுக்கு நல்லது மற்றும் கெட்டது.
இது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக கருதப்படுகிறது. இந்த பைடிக் அமிலம் இரும்புச்சத்து, ஜிங்க், கால்சியம் மற்றும் பிற கனிமச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் உடலில் கனிமச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.
இந்த பைடிக் அமிலம் மாம்பழத்தில் மட்டுமின்றி, பிற பழஙகள், காய்கறிகள் மற்றும் நட்ஸ்களிலும் உள்ளன. முக்கியமாக பைடிக் அமிலம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. ஆகவே தான் மாம்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட சொல்கிறார்கள்.