உயிரிழப்பை அதிகப்படுத்தும் Omicron: எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்! இதன் அறிகுறிகள் என்னென்ன?
ஒமைக்ரான் வைரஸ் தொற்றினால் இங்கிலாந்தில் முதல் உயிர்பலி ஏற்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வைரஸினால் பாதிப்புகளும், இறப்புகளும் அதிகமாகும் என்றும் இனி வரும் வாரங்களில் இந்த வைரஸின் தீவிரத்தன்மை அதிகமாகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் omicron தொற்று தொடர்பான இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் இருப்பது அவசியம். ஓமிக்ரோன் அறிகுறிகளின் இந்த அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தொண்டை அரிப்பு :
ஒமிக்கரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டையில் புண் ஏற்படாமல் அரிப்பு ஏற்படுமாம். இதனால் இந்த அறிகுறியினை அலட்சியம் படுத்த வேண்டாம்.
சோர்வு :
முந்தைய தொற்று மாறுபாடு வகைகளைப் போலவே, ஓமிக்ரோன் சோர்வு அல்லது தீவிர சோர்வை ஏற்படுமாம்.
மிதமான காய்ச்சல் :
கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து லேசானது முதல் மிதமான காய்ச்சல் ஏற்படுமாம். இந்த மிதமான காய்ச்சல் பல நாட்களாக நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.
வறட்டு இருமல் :
ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வறட்டு இருமல் இருக்கும் என்றும், தொண்டு வறண்டு போவது போன்றும் அல்லது தொண்டையில் எதாவது சிக்கியிருப்பதை போன்றும் உணர்வுகள் ஏற்படுமாம்.
இரவில் வியர்த்தல் :
இரவில் வியர்ப்பதும் Omicron தொற்று நோயின் அறிகுறிகளாகும். அதாவது இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏசி அறையில் அல்லது குளிர்ச்சியான இடத்தில் தூங்கினாலும் அவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்று தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத் துறையின் வைத்தியர் கூறியுள்ளார்.