பழைய சாதம் இருக்கா? அப்போ அடுப்பே இல்லாமல் காரசாரமான பச்சவெங்காய சட்னி செய்ங்க
வீட்டில் இரவு சமைத்த உணவு சில நேரங்களில் மிஞ்சி விட்டால் அதை சிலர் வீசி விடுவார்கள். பொதுவாக பழைய சாதம் மிஞ்சி விட்டால் அதற்கு சுவையாக வைத்து சாப்பிட ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்.
வெங்காயத்தை வைத்து பச்ச வெங்காய சட்னி இதற்கு பொரு்ததமாக இருக்கும். இது பழைய சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகளுக்கும், ராகி கூழ், கம்மங் கூழ் வகைகளுக்கும் சிறந்த சைட் டிஷ் ஆகும்.
இதை செய்ய நாம் சிரமப்பட தேவை இல்லை. அது போல அதிக நேரம் செலவு செய்ய தேவை இல்லை. இந்த பச்ச வெங்காய சட்னி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வரமிளகாய் – 5
- புளி – சிறிதளவு
- சின்ன வெங்காயம் – 10
- கறிவேப்பிலை – 2 கொத்து
- உப்பு – சிறிதளவு
- வெல்லம் – ஒரு ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்யும் முறை
முதலில் ஒரு மிக்ஸியில் ஊறவைத்த புளி, வரமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, வெல்லம், நல்லெண்ணெய் என்பவற்றை சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
மையாக அரைத்துவிடக்கூடாது. அதேபோல் இந்த சட்னிக்கு தண்ணீர் சேர்க்கக்கூடாது. நல்லெண்ணெயின் ஈரப்பதமே இதற்கு போதுமான சுவையை கொடுக்கும். பின்னர் தோல் உறித்து வைத்துள்ள சின்னவெங்காயத்தை சேர்த்து அதையும் சேர்த்த கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதை மையாக அரைத்தால் அத்தனை ருசியாக இருக்காது. நீங்கள் கையில் அரைக்கும்போது, இதுபோல் ஒன்றிரண்டாகத்தான் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் இதற்கு சுவை மெலதிகமாக தேவை என்றால் உப்பு புளி சேர்த்துக்கொள்ளலாம்.
இதை காலையில் சாதம், இட்லி, தோசை, பூரி, ஆப்பம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும். வெங்காயத்தில் பல அரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இதை பச்சையாக எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு பல மாற்றம் உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |