கத்தரிக்காய் பிடிக்காதவரா நீங்க? அப்போ ஒரு முறை கத்தரிக்காய் கிரேவியை இப்படி செய்து பாருங்க
சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி உண்ணும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம்.பிரியாணி பிரியர்களுக்கு பெரும்பாலும் கத்த்ரிக்காய் கிரேவியும் பிடிக்கும்.
அப்படி கத்தரிக்காய் பிடிக்காதவர்களாக இருந்தால் இந்த முறையில் ஒரு முறை கிரேவி செய்து கொடுங்க அப்புறம் அவர்களின் விருப்பப்பட்டடியலில் கத்திக்காய் முக்கிய இடம் பிடித்துவிடும்.
ஆரோக்கியம் நிறைந்த கத்திரிக்கா கிரேவியை அட்டகாசமான சுவையில் விரைவாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 7 (நறுக்கியது)
கடுகு - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 3/4 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 2
வெங்காயம் - 1/4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மல்லி தூள் - 1 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
புளி கரைசல் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு தேவையானவை
வேர்க்கடலை - 1 கைப்பிடியளவு
சீரகம் - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1/4 தே.கரண்டி
துருவிய தேங்காய் - 2 தே.கரண்டி
வெந்தயம் - 3/4 தே.கரண்டி
எள்ளு - 1 தே.கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு - 5
இஞ்சி - 1
தக்காளி - 1
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வேர்க்கடலை, சீரகம், சோம்பு, வெந்தயம், எள், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கி, அவற்றை ஒரு தட்டில் போட்டு ஆறவிட வேண்டும்.
பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்ற பதத்தில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த கத்தரிக்கையை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் அடுத்ததாக அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த பேஸ்ட்டையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
நன்கு கொதித்ததும் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு, இறுதியாக தக்காளியையும் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லியிரை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கத்தரிக்காய் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |