பருப்பு இல்லாமல் சாம்பார் வைக்கலாமா? எப்படி செய்யணும்னு தெரியுமா?
பொதுவாகவே இந்திய உணவுகளில் சாம்பாருக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக மதிய உணவு பட்டடியலில் சாம்பார் நிச்சயம் இடம்பிடித்துவிடும்.
சாம்பார் பிரதேசங்களுக்கு ஏற்ப வெவ்வேறு பாணியில் தயாரிக்ப்படுகின்றது. ஆனால் சாம்பார் என்றால் அதில் முக்கிய மூலப்பொருளான பருப்பு இடம்பெற்றிருக்கும்.
வீட்டில் பருப்பு இல்லாத சமயங்களிலும் கூட அசத்தல் சுவையில் சாம்பார் செய்ய முடியும் என்றால் நம்பமுடிகின்றதா? ஆம் பருப்பே இல்லாமல் எப்படி நாவூம் சுவையில் சாம்பார் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 2
முருங்கைக்காய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 4
கொத்தவரங்காய் - 4
சாம்பல் பூசணி - சில துண்டுகள்
மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
சாம்பார் தூள் - 1 ½ தே.கரண்டி
தனியா தூள் - ¼ தே.கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ¼ தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
அரைக்க தேங்காய் - ½ மூடி
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
செய்முறை
முதலில் நறுக்கிய தக்காளி, துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, வெங்காயம், புளி, மற்றும் தோல் நீக்கிய பூண்டு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் முருங்கை காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், மற்றும் பூசணி காயை பெடியாக நறுக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மற்றும் சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து அரைத்த தேங்காய் கலவையை இதனுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் நன்றாக வதக்கி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி நன்றாக வேகவிட வேண்டும்.
இறுதியில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு சேர்த்து பின்னர் கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து அதை சாம்பாரில் சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் பருப்பே இல்லாமல் அட்டகாசமான சுவையில் மணமணக்கும் சாம்பார் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |