102 வயதில் அரங்கை ஆரவாரப்படுத்திய தாத்தா! இறுதியில் என்ன செய்தார் தெரியுமா?
முதியவரொருவர் நடக்க முடியாத நிலையில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஆனால் காலத்தின் கட்டாயம் அதனை நாம் செய்ய முடியாமலே சிலருக்கு சென்று விடும்.
அந்த வகையில் சுமார் 102 வயதான முதி்யவர் ஒருவர் நடக்க கூட முடியாத நிலையில் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டு இறுதி வரை ஓடி வந்துள்ளார்.
முதல் ஓடிய முதியவரை விட கடைசியாக ஓடிய இவரை பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் பலத்த ஆதரவு கொடுத்தார்.
ஓட்டபந்தயத்தில் சாதனை
இவரின் இந்த முயற்சி பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது நடக்க முடியாது என கூறி கொண்டு படுக்கையோடு இருக்கும் முதியவர்களுக்கு இது ஒரு முன் உதாரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த இணையவாசிகள்,“ எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என கமண்ட் செய்து வருகிறார்கள்.
அத்துடன் மில்லிக்கணக்கான பயனர்களின் பார்வைக்கு எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“Never put an age limit on your dreams.”
— Vala Afshar (@ValaAfshar) March 29, 2023
This man was born in 1917, running a race at age 102 pic.twitter.com/cvabjbcOXb