ஒடிசா ரயில் விபத்து: பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெற கடற்கரையில் மணல் சிற்பம்!
நேற்று முன்தினம் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகி பல உயிர்கள் காவு வாங்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடற்கரையில் மணல் சிற்பம் செய்த சம்பவம் தற்போது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
மணல் சிற்பம்
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில் மோதியதில் 280 இற்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளதாகவும் இன்னும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விபத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 6.45 மணிக்கு விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற வேளையில் இருந்து தற்போது வரை மீட்புப்பணிகள் ஆரம்பித்து வருகின்றது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறவும் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும் பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவர் மணற்சிற்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இதைப் பார்ப்பதற்கு அப்படி தத்ரூபமாக இருக்கிறது.
My deepest condolences to the affected families. ?
— Sudarsan Pattnaik (@sudarsansand) June 3, 2023
Praying to Mahaprabhu Jagannath for speedy recovery of survivors” . sand art at puri beach in Odisha.#OdishaTrainTragedy pic.twitter.com/ctZ5SMoDUQ
இவர் இந்த மணற்சிற்பத்தை பகிர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணமடைய மஹாபிரபு ஜெகநாதரைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.