மறைந்த நடிகர் சதீஷ் கவுசிக்கிற்கு கடற்கரையில் மணற் சிற்பம் கலைஞர்... - வைரல் வீடியோ...!
மறைந்த நடிகர் சதீஷ் கவுசிக்கிற்கு கடற்கரையில் மணற் சிற்பம் செய்து கலைஞர் அஞ்சலி செலுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சதீஷ் கவுசிக்
பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் சதீஷ் கவுசிக். இவர் ஸ்ரீதேவி மற்றும் அனில் கபூர் நடிப்பில் வெளியான மிஸ்டர் இந்தியா படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் நடிகர் சதீஷ் கவுசிக் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இச்செய்தி சினிமாத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
நடிகர் சதீஷ் கவுசிக்கிற்கு மணல் சிற்பம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில், பிரபல மணல் கலைஞர் சுதர்சனசாந்த் என்பவர், மறைந்த நடிகர் சதீஷ் கவுசிக்கிற்கு மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தினார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Watch
— HT City (@htcity) March 11, 2023
Popular sand artist @sudarsansand paid a heartfelt tribute to the late actor #SatishKaushik, at the Puri beach in Odisha#SatishKaushikDeath #Bollywood #SandArt #Tributes #ViralVideos pic.twitter.com/j5mnXk3R9r