ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை மரணம்!!! கதறிய பெற்றோர்
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் ஆலக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹசாரே, இவரது இரண்டரை வயது குழந்தை சரத்.
தோட்டத்து வீட்டில் அனைவரும் வசித்து வந்த நிலையில், நேற்று வழக்கம்போல் குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் சரத் காணாமல் போக, பதறிய பெற்றோர் குழந்தையை தேடி அலைந்தனர், எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் ஹாருகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை தேடி வந்தனர், ஆனால் அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது.
சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது, உடனடியாக மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து 24 மணி நேரமானதால் தண்ணீர் , உணவு இன்றி குழந்தை மிகவும் சோர்வாக இருந்துள்ளான் .
மேலும் குழந்தையின் அழுகுரலும் கேட்காததால் பெற்றோர் அச்சமடைந்தனர், தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வந்தது .
24 மணி நேரம் கடந்த நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமலும் , தண்ணீர் மற்றும் உணவு இன்றியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை சரத் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது .
குழந்தையின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, ஆழ்துளை கிணற்றை தோண்டியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது .