பொலிவான சருமத்துக்கு ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்!
பொதுவாகவே நம்மில் பலபேர் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க தெரிவு செய்யும் ஒரு பொருள் என்றால் அது ஓட்ஸ் தான்.
ஓட்ஸ் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க மட்டுமல்ல, சரும அழகுக்கும் பெரிதும் உதவுகின்றது.
அடிக்கடி பார்லருக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக் கொள்ளும் வசதி அனைவரிடமும் இருக்காது. அதனால் வீட்டிலுள்ள சில பொருட்களைக் கொண்டே முகத்தை அழகுபடுத்திக் கொள்ளலாம்.
image - asianet newsable
சரி இனி ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - கால் கப்
தேன் - 1 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 1 தேக்கரண்டி
image - desiblitz
செய்முறை
முதலில் ஓட்ஸை தண்ணீர் கலந்து கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் ஆலிவ் ஆயிலையும் தேனையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் ஓட்ஸூடன் ஆலிவ் ஆயிலையும் தேனையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க் ரெடி.
image - a good hue
எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில் தயார் செய்து வைத்துள்ள ஸ்க்ரப்பை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கண்களில் படாதவாறு முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்.
சிறிது நேரத்தின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி துடைத்துக்கொள்ள வேண்டும்.
இது முகத்தை பொலிவாக்கும்.