ஆரோக்கியம் தரும் தேன் விஷமாகவும் மாறுமாம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளரவிடுவது இல்லை.
இப்படிப்பட்ட தேனில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதற்கு நாம் சுத்தமான அசல் தேனை சாப்பிட வேண்டும். அதேசமயம், தேனை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் அது அசல் தேன்.
சுத்தமான அசல் தேன் எவ்வளவு நாள் இருந்தாலும் அதில் எறும்பு மொய்க்காது.
ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் அது சுத்தமான அசல் தேன்.
சுத்தமான அசல் தேன், பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நாவில் வைத்து சுவைத்தால் தித்திப்பு நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்த பின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் வண்ணமும் நாவில் ஒட்டியிருக்காது.
எப்படி சாப்பிட வேண்டும்?
- சுடுதண்ணீரில் தேன் கலந்து பயன்படுத்தினால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் கிடைக்காது. சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது.
- வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல. பத்து வயதுக்கு பிறகு குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாம். ஆனால், ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
- எந்த வயதினராக இருந்தாலும் ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் தேன் சாப்பிடக் கூடாது. தேனை நக்கித் தான் சாப்பிட வேண்டும். கண்டிப்பாக குடிக்கவோ, விழுங்கவோ கூடாது.
- நெய்யையும் தேனையும் சம அளவில் சேர்க்கக் கூடாது. இல்லையெனில் அது விஷமாக மாறிவிடும்.