கோடை கால சரும பராமரிப்பு உதவும் தயிர்...
பொதுவாகவே சருமத்தை அழகாக்குவதில் தயிர் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும்.
குறிப்பாக கோடை காலங்களில் சருமத்தை ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
தயிரில் விட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளது. அதனால் சருமத்தை ஊட்டமாக வைத்திருக்க உதவுகிறது.
image - india.com
இனி தயிரை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பார்க்கலாம்.
குளிக்கும் நீரில் தயிரை சேருங்கள்
குளிக்கும் நீரில் சில கப் தயிரை சேர்த்து 20 நிமிடங்கள் வரையில் ஊறவைக்கலாம். இவ்வாறு செய்தால் சருமம் குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.
ஃபேஸ் மாஸ்க்
தயிருடன் தேனை சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரையில் வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
image - skin care top news
ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்
தயிருடன் ஓட்ஸை சேர்த்து கலந்து அந்தக் கலவையை உடல் முழுவதும் பூசி மெதுவாக மசாஜ் செய்து பின்னர் கழுவ வேண்டும்.