இது தான் என் புதிய உடல்... 3 மாதத்திற்கு பின் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நித்தி! வெளியிட்ட வீடியோ
சுவாமி நித்தியானந்தா பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேற்பட்ட வழக்குகளில் போலீசார் தேடி வருகின்றனர். ஆனாலும், இதுவரை சிக்காமல் அவ்வப்போது வீடியோ மூலம் தரிசனம் அளித்து வருகிறார்.
சமீபத்தில், சுவாமி நித்திக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மோசமான நிலையில், நித்தியானந்தா இருப்பதாகவும் அவர் மீண்டு வருவேன் எனவும் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

நித்தியின் புதிய வார்த்தைகள்
இந்நிலையில், ஜூலை 13ம் தேதி குருபூர்ணிமா நிகழ்வில் நிச்சயம் பக்தர்கள் மத்தியில் பேசுவார் என்று அவரது சீடர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
அதன்படியே குருபூர்ணிமாவை முன்னிட்டு கைலாசாவின் யூடியூப் சேனலில் நித்தியானந்தா மீண்டும் 3 மாதங்களுக்கு பிறகு பேசினார்.

அதில் முகம் முழுக்க தாடியுடன் ஆங்கிலத்தில் பேசும்போது ஒரு தலைப்பாகையும் அணிந்திருந்தார். தொடக்கத்தில் நகைகளை அணிந்திருந்த அவர், சிறிது நேரம் கழித்து நகைகள் இன்றி பேச்சை தொடர்ந்தார்.
பின்னர், இது அப்டேட்டான புதிய ஆரம்பம் 42 ஆண்டுக்கு பின் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கத்தை வைக்கிறேன். கடந்த ஏப்ரல் 13 ல் இருந்து ஜூலை 13 வரை என் உடல் மூளை அனைத்துமெ மாறி இருக்கிறது.

என்னுடைய புதிய உடல்
இது என்னுடைய புதிய உடல். அதையும் தவறாக பலர் வெளிப்படுத்தினார்கள். கைலாசாவும் அப்டேட் ஆகியுள்ளது. ஏப்ரல் 13 ம் தேதி லிங்கோபத்வரை ஒளியாக நான் பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிட்டது.
மேலும், சாவே என்னை பார்த்தால் பயந்து ஓடும்டா.. நான் மாறவில்லை. உடல் மாறியுள்ளது. தொடர்ந்து என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள்.
இறப்பு கூட உங்களுக்கு அதிக புரிதலை தந்து மனிதராக மாற்றும். உங்கள் உடல் இறப்பதற்கு முன் உங்கள் மனம் பல முறை இறப்பது நல்லது.
அப்போதுதான் வெவ்வேறு வாழ்கையை ஒரே உடலில் வாழலாம். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை எனக்கூறியுள்ளார்... நித்தியின் வீடியோவை இங்கே காணலாம்...