உலகில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள்...முதலிடத்தில் இந்த நாடா?
அதிக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள நாடுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
அமெரிக்கா
அமெரிக்கா இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.
அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது.
இங்கு 22 மில்லியன் பணக்காரர்கள் வசிக்கிறார்கள்.
சீனா
அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா.
உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. இங்கு இருக்கும் சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது.
இங்கு பணக்காரர்கள் உலகளவில் ஒப்பேடு செய்தால் 9.4% ஆகும்.
ஜப்பான்
பணக்காரர்களின் வரிசையில் மூன்றாவது நாடாக இருப்பது ஜப்பான்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குவதுமடுமல்லாமல் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் ஜப்பான் விளங்குகின்றது.
இங்கு வசிக்கும் பணக்காரர்கள் சதவீதம் 6.6% ஆகும்.
ஜெர்மனி
ஜெர்மனி இந்த பட்டியலில் நான்காவது நாடாக உள்ளது. உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.
இங்கு 5.3% பணக்காரர்கள் வசிக்கிறார்கள்.
பிரித்தானியா
பணக்காரர் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நாடு பிரித்தானியா. இங்கு வசிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை 4.4% ஆகும்.