பணக்காரர் என்றால் சும்மாவா? நீதா அம்பானி அணியும் புடவை விலையை கேட்டு வாய்பிளந்த நெட்டிசன்கள்
உலகப்பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரிலையன்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதேபோல அவர்கள் அணியும் ஆடையும் அப்படித்தான். அதிலும் புடவை என்பது என்றால் சும்மாவா! அத்தனை வேலைப்பாடுகள் எல்லாம் அவ்வளவு சிறப்பானதாகும்.
நீதா அம்பானி அணியும் புடவைகளும் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இவர் அணியும் லெஹெங்காக்கள், புடவைகளுக்கு பொருத்தமாக அவர் அணியும் பிளவுஸ்கள் எல்லாமே தனித்துவமானவை.
தங்க ஜரிகை, விலையுயர்ந்த ஓவியங்களால் அவை வடிவமைக்கப்படும். 40 இலட்சம் மதிப்பில் நீதா அம்பானி அணியும் புடவை ரொம்பவும் பேசப்பட்டது.
இத்தனை லட்சத்துக்கு படவை அணிவதென்றால் அதில் என்ன இருக்கும் என்ற யோசனை எல்லோருக்கும் இருக்கும். ஆம், அவர்கள் அணியும் புடவைகளுக்கு மேட்சாக பிளவுஸ்களிலும் தங்க ஜரிகை வேலைகள் மற்றும் ஓவிய வடிவமைப்புகளும் கொண்டிருக்கிறது.
இந்த புடவைகளை சென்னை சில்க்ஸ் இயக்குனர் சிவலிங்கம் தான் வடிவமைத்திருக்கிறார். புகழ்பெற்ற காஞ்சி பட்டு, மெல்லிய தங்க ஜரிகைகள் இந்த சேலையின் எம்பிராய்டரிக்கு பயன்படுத்தப்பட்டன.
எமரால்டு, ரூபி, புஷ்பராகம், முத்து ஆகிய கற்கள் பதித்து இந்த புடவை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அண்மையில் கூட ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதற்கு ஜர்தோசி, சிக்கன்காரி எம்பிராய்டரி மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பட்டோலா பட்டு, படிகங்கள் போன்ற வேலைப்பாடுகள் ஆடையை இன்னும் அழகூட்டியது.