உடல் எடையை குறைக்க நினைத்த இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்: தொடரும் விசாரணைகள்!
அதிக உடல் எடை அதிகம் எனக்கூறி குறைக்க நினைந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல் எடை
பொதுவான தற்போது உடல் எடை அதிகரிப்பது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்காக சிலர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றன.
இவ்வாறு உடல் எடையை குறைக்க முயற்சித்த இளைஞன் தற்போது உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற 20 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனியார் பால் பக்கெட் விநியோகம் செய்வதை தொழிலான கொண்டிருந்தார்.
எடையிழப்பிற்கான மருந்து
குறித்த இளைஞன் உடல் எடையை குறைக்க தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அவருக்கு சில மருந்துக்கள் கொடுக்கப்பட்டது.
அந்த மருந்து தொடர்ந்தும் 10 நாட்கள் சாப்பிட்டு வந்துள்ளார். இவ்வாறு தொடர்ந்தும் சாப்பிட்டு வருகையில் அவருக்கு பலனளிக்கும் வகையில் அவரின் எடையும் குறைந்துள்ளது.
இவ்வாறிருக்கையில் புத்தாண்டு தினத்தில் அவரின் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு அவரின் உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனைக் கவனித்த இளைஞனின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தொடர் தீவிர சிகிச்கை அளிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று (04.01.2023) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பொலிஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.