துளியும் மேக்கப் இல்லாமல் நைட்டியுடன்... வைரலாகும் ராதிகாவின் தங்கை
நடிகை நிரோஷா மேக்கப் இல்லாமல் வீட்டில் இருந்த படியே ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டிருக்கிறார் இந்தப் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நடிகை நிரோஷா
அக்னி நட்சத்திரம் எனும் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை நிரோஷா. அவர் நடிகை ராதிகாவின் சகோதரியாவார்.
அக்னி நட்சத்திரம் படத்திற்குப் பிறகு பிறகு கமல்ஹாசன் உடன் சூரசம்ஹாரம் விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே உள்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் சீரியல், சினிமா என இரண்டிலும் கலக்கியிருக்கிறார். நிரோஷா நடிகர் ராம்கியை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த நிரோஷா. கத்திச்சண்டை, தானா சேர்ந்தக் கூட்டம், கடவுள் இருக்கான் குமாரு போன்றத் திரைப்படங்களில் நடித்திருந்தார்.
வைரல் போட்டோ
இந்நிலையில் நிரோஷா துளியும் மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
அந்தப் புகைப்படத்தில் மேக்கப் போடாமல் நைட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.