உன் ஆளுக்கு வேணும்னா நீ போய் வாங்கி குடு.. பிக் பாஸையே ரவுண்டு கட்டி கலாய்த்த பிரியங்கா!
விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளில் முதன்மையானவர் என்பதால் பிரியங்கா சும்மா பிக் பாஸையே ரவுண்டு கட்டி கலாய்த்து வருகிறார்.
சின்னப்பொண்ணுவின் நைட்டியை பிக் பாஸ் திருடிவிட்டார் என இன்றைய எபிசோடில் கோபம் வர மாதிரி பிரியங்கா பண்ண காமெடியால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
தொடர்ந்து பிக் பாஸை வம்பிழுத்து பிரபலம் ஆகும் ஸ்ட்ராட்டர்ஜியை பிரியங்கா சரியாக செய்து வருகிறார் என்றும் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.
பாடகி சின்னப்பொண்ணுவின் நைட்டியை திருடி பிக் பாஸ் என்ன செய்ய போகிறார். அவரது நைட்டி காணவில்லை என அவர் ஒரு பக்கம் புலம்பியபடி தேட அவர் என்ன சொல்கிறார் என்பதை கூட காதில் சரியாக போட்டுக் கொள்ளாமல், பிக் பாஸையே நைட்டி திருடன் என பட்டம் கட்டி பிரியங்கா கலாய்த்துள்ளார்.
மேலும், உன் ஆளுக்கு வேணும்னா நீ போய் வாங்கி குடு.. அது என்ன சின்னப்பொண்ணுவின் நைட்டியை திருடுறது என கேமராவை பார்த்து பிக் பாஸை எந்தளவுக்கு ஓட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஓட்டிவிட்டார் பிரியங்கா.
ஆனால், பிரியங்காவின் இந்த சேட்டைகள் எல்லாம் ரசிக்கும் படியாக இல்லை என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் புரமோவில் மைக் சரியாக மாட்டாமல் பிரியங்கா இருந்ததற்கு பிக் பாஸ் அதிரடியாக வார்ன் பண்ண இதுதான் காரணம் என நெட்டிசன்கள் ஆன் தி ஸ்பாட்டிலேயே சமூக வலைதளங்களில் பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.