தாலி ஏறியவுடன் வேலையை காட்ட ஆரம்பித்த சம்பந்தி.. திகைத்து போன பாக்கியா
இனியா கழுத்தில் தாலி ஏறியவுடன் பாக்கியாவின் ஹோட்டலை அவருடைய சம்பந்தி வலைத்து போட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
கணவர் இல்லாமல் தனியாக நின்று குடும்பத்தையும் தன்னுடைய கனவுகளையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதனை கருவாகக் கொண்டே பாக்கியலட்சுமி சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இரண்டு திருமணங்கள் செய்து விட்டு, எதையும் சரியாக பார்த்துக் கொள்ள முடியாத கோபிநாத், தற்போது குடும்பமும் இல்லாமல் அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். பிள்ளைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்த பாக்கியா, மகன்கள் மற்றும் மருமகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
ஹோட்டலை எழுதி வாங்கிய சம்பந்தி
இந்த நிலையில், படிப்பை முடித்து விட்டு ஊடகவியலாளராக பணியாற்றி வரும் இனியாவை சுதாகர் ஒரு வழியாக தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.
இனியாவும் அவருடைய காதலுக்காக பல வழிகளில் போராடினாலும், அவற்றையெல்லாம் முறியடித்து கோபி திருமணம் செய்து வைத்து விட்டார். பாக்கியாவால் அவருடைய மகள் வாழ்க்கையில் எந்தவிதமான முடிவும் எடுக்கமுடியவில்லை.
திருமணம் முடிந்த கையோடு பாக்கியாவும் தன்னுடைய மாமியார் பெயரில் இருந்த ஹோட்டலை சம்பந்தியான சுதாகர் பெயருக்கு மாற்றிக் கொள்ள ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுகிறார். ஆனால் அதனை தவறாக பயன்படுத்தி சுதாகர் முழு ஹோட்டலையும் இனியாவுக்காக பாக்கியா பரிசாக கொடுத்து விட்டார் என்பது போன்று மாற்றி விடுகிறார்.
இதனால் பாக்கியா இவ்வளவு காலமாக பொத்தி பொத்தி வைத்திருந்த ஹோட்டல் சுதாகர் கைக்கு சென்று விட்டது. இந்த சவாலை பாக்கியா எப்படி முறியடிப்பார் என்பதனை இனிவரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |