இரவில் பல் துலக்காவிட்டால் என்ன நடக்கும்? பிரச்சனையை தெரிஞ்சிக்கோங்க
இரவில் பல் துலக்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல் பிரச்சனை
இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல் பிரச்சனை ஏற்படுகின்றது. சிறு குழந்தைகள் அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டு பற்களை வீணாக்குகின்றனர்.
இதனால் காலை மற்றும் இரவில் பல் துலக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு இரவில் பல் துலக்கவில்லை என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இரவில் பல்துலக்காவிட்டால் என்ன பிரச்சனை?
இரவில் தூங்கும் முன்பு பல் துலக்காவிட்டால் வாயில் பாக்டீரியாக்கள் வளரும். இதன் விளைவாக வாய் துர்நாற்றம் ஏற்படும்.
இரவு தூங்கும் முன் பல் துலக்கவில்லை என்றால் பல் சொத்தை பிரச்சனை ஏற்படும்.
இரவில் துங்கும் முன் பல் துலக்காவிட்டால் வாயில் வளரும் பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து உடல்நல தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இரவு தூங்கும் முன் பல் துலக்காவிட்டால் ஈறுகளில் தொற்று இருக்கும். இது நீரிழிவு றோயாளிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
இரவில் தூங்கும் முன் பல் துலக்காவிட்டால் சுவாச தரத்தை கெடுத்துவிடம். மேலும் தொற்றுக்களை ஏற்படுத்தும்.
இரவில் தூங்கும் முன்பு பல் துலக்காவிட்டால் அருகில் உள்ளவர்களிடையே மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |