நியூசிலாந்தில் வேலைவாய்ப்பு: Work Visa பெற்றுக்கொள்ள இலங்கை, இந்தியர்களுக்கு வாய்ப்பு
நியூசிலாந்திற்கு பருவகால விசா மூலம் பயணம் செய்து வேலைப் பார்க்கலாம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது.
அந்த வகையில், பண்ணை வேலையில் ஆர்வமாக இருப்பவர்கள் Work Visa மூலம் நியூசிலாந்துக்கு செல்லலாம். அதே போன்று விவசாய வேலை செய்பவர்கள், மாடு மேய்ப்பவர் , துப்பரவு தொழில் செய்பவர்கள் இந்த விசா மூலம் விண்ணப்பிக்க முடியும்.
பருவகால விசா
பல்வேறு நிபந்தனைகளுடன் குறுகிய கால அடிப்படையில் சுமாராக 3 வருடங்களுக்கு இந்த வீசா வழங்கப்படுகின்றது. இதற்கு பட்ட படிப்பு , ஆங்கில புலமை இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேற்குறிப்பிட்ட வேலைகளில் ஆர்வம் இருப்பவர்கள் பணிக்கு சென்று ஏழு மாத காலப்பகுதியில் பருவகாலம் முடிவடைந்த பின்னர் நாடு திரும்ப வேண்டும் என்பது கட்டாயமாகும்.
விண்ணப்பிக்கும் தொழில்துறையில் ஆறு மாத முன் அனுபவம் தேவை. அதனை உறுதிப்படுத்தும் ஆவணம் அவசியமாகும்.
நிபந்தனைகள்
1. மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து பருவகாலத்தின் போது மீண்டும் நியூசிலாந்து செல்ல வாய்ப்பு வழங்கப்படும். பருவாகல விசா மூலம் நியூசிலாந்து செல்வோருக்கு அங்கு தொடர்ந்து வாழ முடியாது.
2. குடும்பத்தை அழைத்து போக முடியாது.
இந்த வாய்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |