மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் புதிய திருப்பம் - உத்தரவு போட்ட ஐகோர்ட்
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை விதித்துள்ளது.

மாதம்பட்டி ஜாய் கிரிசில்டா
பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபல டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப்பாக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.
கடந்த வருடம் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் முடித்துக் கொண்டதாக ஜாய் கிரிஸ்டில்டா சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

மேலும் தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறி இருந்தார். “கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.
நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாதம்பட்டி ரங்கராஜ் மேல் அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதன் பின்னர் மாதம்பட்டி சரியான பதில் எதுவும் குறிப்பிடாததால் ஜாய் மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்ததை மாநில மகளிர் ஆணைய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டார்.

புதிய உத்தரவு
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி தரப்பில் மரபணு பரிசோதனை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர் மரபணு பரிசோதனைக்கு வர வேண்டும் என்றும், பரிசோதனை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடக்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
அறிக்கை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவு.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |