சங்கீதா குறித்து விஜய் அம்மா கூறியது என்ன?
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா குறித்து அவரது மாமியாரும், விஜய்யின் தாயுமான ஷோபா அளித்து பழைய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
விஜய், சங்கீதா விவாகரத்து பிரச்சனை
நடிகர் விஜய் தற்போது முழு நேர அரசியலில் இருந்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் தனது கட்சிக்கூட்டத்தை போட்டு தனக்கான வாக்குகளை சேகரித்து, மக்களின் ஆதாரவை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி சங்கீதா, விஜய் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து கோரியுள்ளதாக புகார் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து இரு தரப்பினரும் எந்தவொரு கருத்தும் தெரிவிக்காத நிலையில், இதுகுறித்தான பேச்சுக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
விஜய்யின் மனைவி விஜய் திருமணத்திற்கு மீறிய உறவில் வேறொரு நடிகையுடன் இருப்பதாகவும், தன்னை சுதந்திரமாக இருக்கவிடவில்லை, குடும்பத்தை கவனிக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளாராம்.
அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் தன்னிடம் உள்ள ஆதாரத்தையும் காட்டுவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக இணையத்தில் புகைப்படங்கள் பரவி வருகின்றது.

சங்கீதா குறித்து விஜய் அம்மா
இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா சங்கீதா குறித்து தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகின்றது.
ஷோபா கூறுகையில், சங்கீதா நல்ல மருமகள் மட்டுமின்றி, நல்ல மகளும் தான். ஆனாலும் உண்மையாகவே அவர் மொத்த குடும்பத்தையும் அ்க்கறையாக பார்த்துக் கொள்வார்.

குழந்தைகள் மீதும், எங்கள் மீதும் அதிக அக்கறையுடன் இருப்பதுடன், ஒரு கப் தண்ணீர் வேண்டுமென்றால் கூட அவரே உடன் இருந்து பார்த்துக் கொள்வதுடன், தனித்தனியாக அனைவர் மீதும் கவனம் வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளதை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி சங்கீதா குறித்து விஜய்யின் தந்தை சந்திரசேகர் அளித்த பேட்டியையும் வைரலாக்கி வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |