வாழ்நாளில் இதை செய்வதற்கு தயங்காதீங்க! பெரும் நஷ்டத்தை சந்திப்பீங்க
வாழ்க்கை எப்பொழுதும் நாம் நினைத்ததைப் போல் இருக்காது. நம்மை வெவ்வேறு பாதைக்கு இட்டுச் செல்லும்.
ஆனால், ஒரு சில விஷயங்களில் நாம் எப்படி இதை எடுப்பது, எதிர்கொள்வது என்று தயங்கிக் கொண்டிருந்தால் அது நம் கையை விட்டுப் போய்விடும்.
அதனால் வாழ்க்கையில் எப்பொழுதும் 3 விடயங்களுக்கு நாம் தயங்கவே கூடாது. அவை என்னவென்று பார்ப்போம்.
உண்பதற்கு தயங்கக் கூடாது
நம்மில் ஒரு சிலர் வீட்டில் நன்றாக உண்பார்கள். ஆனால், வெளியிடங்களுக்கோ, உறவினர் வீட்டுக்கோ சென்றால், உண்பதற்கு தயக்கம் காட்டுவார்கள்.
காரணம் மற்றவர்கள் முன்னிலையில் உண்பதற்கு ஏற்படும் தயக்கம். அவர்கள் என்ன நினைப்பார்களோ, ஏது நினைப்பார்களோ என்ற எண்ணம். ஆனால், சாணக்கிய நீதிப்படி உணவை எப்போதும் வயிறார சாப்பிட வேண்டும். அது எந்த இடமாக இருந்தாலும் சரி.
கற்றுக்கொள்ள தயங்கக் கூடாது
நமக்கு எந்த விடயத்திலாவது ஆர்வம் அதிகமாக இருந்தால் அதைப் பற்றி கேள்வி கேட்க ஒருபோதும் தயங்கவே கூடாது. அதற்காக தயங்கி நிற்கக் கூடாது. நமது சந்தேகங்களையும் தெரியாத விடயங்களைப் பற்றி தெரிந்துகொள்வதும் நமது கடமையாக இருக்கிறது.
கடனை திருப்பிக் கேட்க தயங்கக் கூடாது
நாம் யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்திருந்தால், அந்தப் பணத்தை எப்படி அவரிடமிருந்து திரும்பி வாங்குவது என்ற தயக்கம் இருக்குமானால், அதை விட்டுவிட வேண்டும். ஏனென்றால் பண விடயத்தில் நாம் தயக்கம் காட்டினால் அது நமக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.