இனி நைட் டைம்ல இதையெல்லாம் செய்யாதீங்க...
பொதுவாகவே மாலை ஆறு மணிக்கு மேல் சில விஷயங்களைச் செய்யக்கூடாது என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறுவார்கள். அது செல்வத்தை பாதிக்கும் வீட்டுக்கு தரித்திரத்தைக் கொண்டு வரும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இருப்பினும் இரவு நேரங்களில் சில விஷயங்கள் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
நகம் மற்றும் முடி வெட்டக்கூடாது
இரவில் நகம் மற்றும் முடி வெட்டுவது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இது இரவு நேரங்களில் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் லட்சுமி தேவியைஅவமதிப்பதாக கருதப்படுகிறது.
துணி துவைக்க வேண்டாம்
இரவு நேரங்களில் துணிகளை துவைத்து வெளியில் காயப் போடுவதால் அது குறிப்பிட்ட அந்த துணிக்கு சொந்தக்காரரான நபருக்கு எதிர்மறை ஆற்றலை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, அந்த துணியை அணிந்து அவர் செய்யும் எந்தவொரு காரியமும் தோல்வியில்தான் முடியுமாம்.
தலைமுடி சீவக்கூடாது
உறங்கும் நேரத்தில் கூந்தலை விரித்துக்கொண்டு உறங்குதல் அல்லது தலைமுடியை சீவுதல் என்பன வீட்டுக்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும்.
உப்பு, சீனி,பால் என்பவற்றை கொடுப்பதை தவிர்க்கவும்
சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மஞ்சள், உப்பு, சீனி என்பவற்றை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தால் பணப் பிரச்சினை ஏற்படுவதோடு, வாழ்க்கை உறுதியற்றதாகிவிடும்.
வீட்டை சுத்தம் செய்ய வேண்டாம்
இரவு நேரங்களில் வீட்டை சுத்தம் செய்தால் குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் அதிகரித்து, வீட்டின் அமைதி சீர்குலைந்துவிடும்.
அழுக்கு பாத்திரங்களை சமையலறைக்குள் வைக்காதீர்
அழுக்கு பாத்திரங்கள் இருந்தால் அதை கழுவி விட்டுத்தான் உறங்கச் செல்ல வேண்டும். அதை அசுத்தமாக அப்படியே வைத்துவிட்டு தூங்கும் பட்சத்தில் வீட்டில் வறுமை மற்றும் கடன் பிரச்சினை அதிகரிக்கும்.