இந்த பொருட்களை மறந்தும் கூட தானம் செய்யாதீர்கள்! மீறினால் தீராத வறுமை ஆட்டிப்படைக்கும்
தானம் செய்வது நல்லது தான். ஆனால், சில பொருட்களை தானம் செய்வது தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
அவை எந்தெந்த பொருட்கள் என்பதை பார்க்கலாம்.
கெட்டுப்போன உணவுகள்
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்லி கேட்டிருப்போம். ஏழைகளின் பசி தீர்க்க கொடுக்கும் தானம் நமக்கு புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
ஆனால், நாம் அப்படி வழங்கும் உணவு பழையதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீணான உணவை தானம் செய்தால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். வீட்டில் தரித்திரம் கொண்டு வந்து சேர்க்கும்.
கத்தரிக்கோல்
கத்தரிக்கோல், கத்தி போன்ற வேறு எந்த கூர்மையான பொருளையும் ஒருபோதும் யாரிடமும் தானமாக செய்யக்கூடாது. இவற்றை தானம் செய்வதன் மூலம், அதிர்ஷ்டம் உங்களை விட்டு விலகி ஓடும். அதே நேரத்தில், குடும்பத்தில் இன்னல்களும், பிரச்சனைகளும் அதிகரிக்கும்.
கிழிந்த புத்தகங்கள்
நீங்களும் யாருக்காவது புத்தகங்கள் அல்லது நூல்களை நன்கொடையாக கொடுத்தும் போது, கிழிந்த புத்தகங்களையோ, நூல்களையோகொடுக்க வேண்டாம்.
இப்படிச் செய்வதால், உங்கள் குழந்தைகளின் கல்வியில் தடை ஏற்படும். அத்துடன் குழந்தைகளின் மகிழ்ச்சியை குழைத்து போடும். எனவே. அதற்கு பதிலாக நீங்கள் எப்போதும் அவர்களுக்கு புதியவற்றைக் கொடுங்கள்.
கெட்டுப்போன எண்ணெய்
வீட்டில் பயன்படுத்திய அல்லது கெட்டுப்போன எண்ணெயை தானம் செய்வது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால், சனி தேவரின் கோபம் உங்கள் மீது வரும். அப்படி, வரும் சனீஸ்வரரின் கோபப்பார்வை, உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.