காதலியை தேடும் ஆண்களுக்கு நீயா நானாவில் தரமான அடி! கோபிநாத் பேச்சை கேட்டு மிரண்டு போன அரங்கம்
என்னுடைய காதலி இந்த உலகத்தில் ஏதோவொரு மூளையில் இருக்கிறாள் என ஒரு இளைஞர் கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீயா நானா ஷோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா. இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
என்னுடைய காதலி எனக்காக வருவாள்
இந்த நிலையில் இந்த வாரம் நீயா நானாவில் ஆன்லைன் காதலி எங்கு இருக்கிறார் என்பது தொடர்பிலும் காதல் திருமணமா? அல்லது பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமா? இரண்டு தரப்புகள் வாதாடுகிறது.
இதனை தொடர்ந்து அதில் ஒரு இளைஞர், “ என்னுடைய காதலி இந்த உலகில் எந்த மூளையிலும் இருக்கலாம். அவள் எனக்காக வருவாள்.” என கூறியுள்ளார்.
இதனை மறுத்து இன்னொரு நபர்,“ காதல் ஒன்றும் மேஜிக் இல்லை.” அதனை நாம் கனவு கண்டுக் கொண்டு இருக்க முடியாது.
இந்த வாதத்தை தொடர்ந்து குறித்த இளைஞரின் பதிலை கண்டு தொகுப்பாளர் கோபிநாத் கொந்தளித்துள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, “காதலை உனக்குள் தேடு” என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.