காதலனுக்கு துரோகம் செய்த காதலி கொடூரமாக படுகொலை! விசாரணையில் வெளிவந்த அப்பட்டமான உண்மைகள்
இலங்கையில் காதலனால் காதலி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்
இலங்கை - கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய பெண் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண் குடும்பத்தின் மூத்த மகள் எனவும் அவர்களுக்கு இன்னொரு மகள் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் தன்னுடைய உயர்தர படிப்பை முடித்து விட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் படித்துக் கொண்டு, கல்வி சார்ந்த யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம், இலங்கை- கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் குறித்த பெண் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
பொலிஸார் விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணையில் பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்தள்ளதுடன் கொலையாளியையும் கைது செய்துள்ளனர்.
மேலும் காதலன் கூறிய சில விடயங்கள் பெண்ணின் பெற்றோருக்கும், பொலிஸாருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
அதில், “ இருவரும் நீண்டக்காலமாக காதலித்து வருகிறோம், சமீப தினங்களுக்கு முன்னர் காதலை முறித்துக் கொள்வோம் என ஹன்சிகா கூறினார். இதனை தொடரந்து இவர் என்னை அவமதிக்கும் வகையில் நான் செய்ய வேண்டாம் எனக்கூறும் விடயங்களை செய்வார்.
எனக்கு அவர் வேண்டும். அவர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. நான் அவரை உண்மையாகவும் முழு மனதுடன் நேசித்தேன். இவர் ஒரு பையனுடன் அடிக்கடி பேசிக் கொள்வார்.
என்னை பிரிந்து அவருடன் சென்று விடுவார் என்ற நோக்கில் தான் கடுமையான கட்டுபாடுகளை விதித்தேன்.
ஹன்சிகா அதனை கேட்கமால் என்னை வேண்டாம் என்றார். இதனால் எனக்கு வேறு எதுவும் செய்வதற்கு எனக்கு வழி இல்லை” என்று கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணின் சடலம் மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸார் மேலதிக விசாரனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் இலங்கை மக்களிடையிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான மேலதிக விடயங்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.