பெண்களிடமிருந்து நகை வாங்கி தொழில் செய்யும் கணவர்களுக்கு தரமான அடி- நீயா நானா ஸ்பெஷல்!
பெண்களிடமிருந்து நகை வாங்கி தொழில் துவங்கும் கணவர்களுக்கு நீயா நானாவில் வைத்து கோபிநாத் தரமான அடி கொடுத்துள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய ஷோக்களில் ஒன்று தான் நீயா நானா.
இந்த ஷோவை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
சமூகத்தின் அடக்கு முறையால் கூற முடியாத சில விடயங்களை இரண்டு அணிகளாக பிரித்து வாதாடி அவர்களுக்கான சரியான தீர்வை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருக்கின்றது.
இதனால் இந்த ஷோக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
கணவர் கூறிய ஒற்றை வார்த்தையால் கடுப்பாகிய கோபிநாத்
அந்த வகையில் இந்த வாரம் நகைக்களுக்காக அதிகமாக பணம் செலவிடும் மனைவிமார்கள் - கணவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அதில், பெண்ணொருவர் என்னுடைய கணவர் புதிய தொழில் மற்றும் வாகனங்கள் வாங்கும் போது அவரிடம் இருந்த நகைகளை தான் வைத்து பணம் கொடுத்ததாக கூறியுள்ளார்.
அப்போது கணவர் ஒருவர்,“ நகை வைத்ததற்கான வட்டியை நாங்கள் தான் மாதம் மாதம் கட்டுகிறோம்.” என கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான கோபிநாத், நீங்கள் செய்யும் வேலைக்களுக்கு பெண்கள் உடந்தையாகவே இருக்கணுமா? என கடுப்பில் பேசியுள்ளார்.
இந்த காட்சிகளை ப்ரோமோவாக இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த பெண் இணையவாசிகள்,“ இது தான் சரியான கேள்வி ” என கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |