சுட்டு போட்டாலும் எங்களுக்கு திருமணம் வேண்டாம்! நீயா நானாவில் போராட்டத்தில் குதித்த இளம் பெண்கள்
சுட்டு போட்டாலும் எங்களுக்கு திருமணம் வேண்டாம் என நீயா நானாவில் கூறிய பெண்களின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சி மற்றைய நிகழ்ச்சியை விட டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விவாதம் போல் பேசி அதற்கு ஒரு தீர்வு காண்பது தான் இந்த நீயா நானாவின் முக்கியம்சம்.
மேலும் இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்களும் அதிகம் இருக்கின்றார்கள்.
பெண்கள் கேட்ட சர்ச்சைக்குரிய கேள்வி
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆண்கள், திருமணம் செய்து கொள்ள ஆர்வம் இல்லாத பெண்கள் என இரண்டு தரப்பினர்கள் வருகை தந்துள்ளார்கள்.
இந்த வாரம் இவர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சினைகள் தான் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், “பெண்கள் தான் திருமணத்தின் போது தாலி, மெட்டி,சமையல் என அனைத்த விடயங்களிலும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு ஒரு பதில் கூறுங்கள்.” என பெண்கள் தரப்பு கேள்வியெழுப்பியுள்ளது.