நீயா நானா கோபிநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா? தீயாய் பரவும் தகவல்
நீயா நானா நிகழ்ச்சி மூலம் அனைத்து இல்லங்களுக்கும் அறிமுகமானவர் தொகுப்பாளர் கோபிநாத்.
நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அணியும் ‘கோட்’ இவருக்கு புதிய அடைமொழியை வாங்கி தந்தது.
அதன் பின்பு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் ‘கோட்டு கோபிநாத்’ என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
மேடை பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட கோபிநாத் விஜய் டிவியின் மூத்த தொகுப்பாளராக பார்க்கப்படுகிறார்.
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் கோபியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அதாவது அவரின் முழு சொத்து மதிப்பு 1 முதல் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7 கோடி முதல் 39 கோடி வரை) என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதுக் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை இருப்பினும் கோபிநாத்தின் சொத்து மதிப்பு பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.